My Pages Old

அவதார்கள்

அனைவரும்  இந்த  வழியில்  தானே  வந்தார்கள்

தனி  தனியாய்

இவர்கள்  மட்டும்  எப்படி  ஈரினத்தில்  கலந்தார்கள்

என்கின்ற  சந்தேகம்   உண்டு  எனது  பள்ளி  பருவம் 

முதல்

சென்னையில் ,

அன்று  தான்  இவர்களை  அதிகம்   பார்த்தேன்

முதல்  முறை  ரயிலில்  பகலில்   வரும்  போது

sathish சொன்னான்  இவங்கள  பார்த்தால்  கண்டுகொள்ளதே

பார்த்தால்  கண்டிப்பா  காசு  வாங்குவாங்கனு

நான்  அன்று  மாட்டி  கொன்டேன்  பாக்கெட்டில்  கிடைக்காத 

5 ருபாய்க்கு  முடிவாக  தென்பட்டது  10 ருபாய்

sathish  தப்பிச்சிட்டான்

பார்ப்பதற்கு  பெண்ணாகவும் எண்ணத்தில் ஆணாகவும்   

இருக்கின்ற 

இவர்கள்  பிறந்திருக்க  வாய்ப்பில்லை

கருப்பையிலே 

அவதரித்த  அவதார்கள்

அதனாலோ  என்னவோ  இவர்களை  பார்க்கும்  பொழுது 

முகத்தில்  கண்டு  கொள்ளாது  போலும்

மனதில்  இவர்களை  கடக்கும்  தொலைவை

மனக்கணக்கு  செய்து  கொண்டும் 

நகர்கின்றேன்  ஏதும்  காணாதது  போல

 

இப்படித்தான் இருந்தேன் பல காலமாய்

நாம் பேசினால் என்ன ஆக போகிறது இல்ல பேசுனா

bulb வாங்கிருவேன்ற மூன்றாம் கண் நிச்சயிக்குமோ

என்னை இப்படி தான் சித்தரிக்கும் என்கின்ற

கண்ணோட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் …

அவளாய் வந்தால் என்னை பற்றி சொன்னால்

ரகசியம் என்று என்னை பற்றி நான் நினைத்த

என்னை விழியால் பற்ற வைத்து சென்றாலே

இந்த strawberry

 

அறை பார்வை இடைவெளியில்

அறை பார்வை விழி ஓரத்தில் கட்டி அணைக்க பக்கம் இருந்தும்

பறக்கும் முத்தம் பார்வையில் வாங்க

கொஞ்சம் கொஞ்சித்தான் மயங்கினேன்

இந்த மாலை வேளையில் …

 

என் பெண் 

அவளை  பணி  செய்யும்  இடத்தில்  தான்  நான்  முதலில்

பார்த்தேன்  அந்த  பூங்கொடியை

கொஞ்சம்  உயரம்  கம்மினு  சொல்றதுக்கு

கொஞ்சம்  தான்  உயரம்னு  சொல்லலாம்

என்  அம்மா  மாதிரி

மலையாள  மொழியின்  ராகம்  போலவே

இவள்  பேசும்  தமிழ்   பேச்சில்  இருக்கும்

மழலையின்  குரல்  போல

ஒவ்வொரு    வாக்கியத்தின்  முடிக்கும்   போது  நெடுளில்   இழுப்பாள் .

Actualah கொஞ்ச  நாளையே  out ஆகிட்டான்.

Blue color sareela பார்த்த அண்ணைக்கே..

என்  கண்  பார்த்தே    காதல்  சொன்னால்  இந்த  முல்லை

நான்  காலம்  கடந்து    சொன்னதால்  விரித்தாள்  முள்ளை

பல  பெண்  பார்த்து  உணர்ந்தேன்  உந்தன்  சொல்லை 

நீயோ  அங்கு  நானோ  இங்கு

தனி  தனி  தீவில்

நீயும்  நானும்    

நேரும்  நேரும்  பார்த்த  பின்பே

நேரும்  நேரம்  காதல்  பூத்த  நேரம் 

இதுதானோ

 

 நெடுநல்வாடை

இந்த  bhai boy bye சொல்லி  dubhai சென்றானே

இந்த மண்ணை பிரிந்தான் .

விண்ணில் பறந்தான் .

இவள் கண்ணில் மறைந்தான்

மூச்சு காற்றில்  கலந்து  போனதால்

பேசும் பேச்சில் காதல் வாசம் குறைய வில்லை.

தூரம் கூட தூரம் இல்லை

நேரம் கூட பாரம் இல்லை.

கடிகார முள்ளை

கோர பார்வை பார்த்து

நேரத்தை துரத்த 

நிமிட  முள்ளும் கொஞ்சம் வேகம் ஓடி ஓடி

மூச்சு வாங்க கூட நேரத்திற்கும் நேரமில்லை.

பூத்திருந்ததே காத்திருக்கிறாள்

காத்திருந்ததே பார்த்திருக்கிறாள்

பேசாத புகைபடம் பார்த்து பேசி பேசி

தொடுத்தால் கல்யாண மாலையை.

இவன் வர காத்திருக்கிறது

பாதையும் இந்த பேதையும் .

காலமும் வேடிக்கை பார்க்கிறது

அரை மதி  சிலுவையில் அறையும் நாளுக்காக

நெடுநல்வாடை தீரும் என்னாள்  என்று???

 

First night

அணைத்தாள் விளக்கை

என்னுடன் சேர்த்து…

Time Travel

ஜன்னல் ஒரே பயணங்கள்
சாலைகளில் முன்னோக்கியும்
வாழ்க்கையை பின்னோக்கியும்
நகர்த்தியே நகர்ந்து விடுகின்றன
எல்லாம் கடந்து போகும் என்பது போலே.

எத்தனை கனவு, எத்தனை நினைவு
கடந்த காலங்களின்
சுகமான நினைவுகளாய்
எனக்கு மட்டுமே தெரிந்த நிகழ்வுகள்
யாரிடமும் நான் சொல்ல முடியாத தவிப்புகள்
காலத்தின் வேகத்தில் நான் மறந்த நபர்கள்
கடந்த காலத்தின் தவறுகள்
நிகழ் காலத்தின் நிஜமான நான்
சொல்லிய பொய்கள், நேர்மையான நேரங்கள்
தொலைத்த காதலின் வலி
இதையெல்லாம் உணர்த்துகிறது
ஜன்னல் வழியே நான் பார்க்கும் போது.

கண்ணில் தெரியும் இடங்களை பார்க்கும் போது
சில விளக்குகளின் ஒளிகள்
கடந்த காலத்தை ஒத்த பதிவில் கொண்டு பொய்
நிறுத்திவிடுகிறது
ஏதும் பாடல்கள் கேட்டால்
அந்த பாடல்கள் முன்பு எந்தெந்த சூழ்நிலைகளில்
கேட்டிருந்தேன் என்பதை நினைவூட்டுகிறது
அப்பொழுது இருந்த மனநிலைமையும்
அப்பொழுது கூட இருந்த நபர்களையும்
கண் முன்னே காட்டி,
மனக்கண்ணில் அழகை ஓடுகிறது.

நான் எப்படி இருந்தேன் என்ற வெளிச்சப்படம்,
பேருந்தின் இருள் நிறைந்த பயணங்களில்
கிடைக்கிறது.